/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெறி நாய் கடித்ததால் கொடூரம் அடுத்தடுத்து 3 கன்றுக்குட்டி பலி
/
வெறி நாய் கடித்ததால் கொடூரம் அடுத்தடுத்து 3 கன்றுக்குட்டி பலி
வெறி நாய் கடித்ததால் கொடூரம் அடுத்தடுத்து 3 கன்றுக்குட்டி பலி
வெறி நாய் கடித்ததால் கொடூரம் அடுத்தடுத்து 3 கன்றுக்குட்டி பலி
ADDED : மார் 15, 2025 11:42 PM
திருப்பூர்: திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் அடுத்தடுத்து மூன்று கன்றுக்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
வெறி நாய் கடித்து இவை பலியாகியிருப்பதால் அப்பகுதியினர் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.திருப்பூர் மாநகராட்சி, 33 வது வார்டுக்கு உட்பட்டது குளத்துப்பாளையம், ஆலங்காட்டு புதுார் ஆகிய பகுதிகள். ஊத்துக்குளி ரோட்டில், மாநகராட்சியின் எல்லைப் பகுதியாக உள்ளது.
பெரும்பாலான விவசாய தோட்டங்களும், சற்று தள்ளி சாய ஆலை உள்ளிட்ட சில நிறுவனங்களும் இப்பகுதியில் உள்ளன. நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவரின் மூன்று மாத வயதுடைய ஒரு கன்றுக்குட்டி திடீரென உடல் நலம் பாதித்து உயிரிழந்தது.
கடந்த சில நாள் முன் இரவு நேரம் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், சதீஸ்குமார் தோட்டத்தில் மாடு கட்டியிருந்த இடத்தில் சென்று பார்த்தனர்.
அங்கிருந்த தெரு நாய் தப்பியோடியது. அப்போது கன்றுக்குட்டி காலில் ரத்தக் காயத்துடன் காணப்பட்டது. நாய் கடிக்க முயன்ற போது காலை உதறியதால் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதி விட்டனர். அடுத்த நாள் கால்நடை மருத்துவர் வந்து பார்த்து காயத்துக்கு சிகிச்சை அளித்தார்.
நேற்று மாலை உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு வாயில், எச்சில் வழிந்த நிலையில் பரிதாபமாக கன்றுக்குட்டி உயிரிழந்தது. மருத்துவர் ஆய்வு செய்து விட்டு வெறி நாய் கடித்த பாதிப்பு என்று தெரிவித்துள்ளார். அதேபோல் கடந்த இரு நாட்களில் அடுத்தடுத்து யுவராஜ் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் தோட்டங்களிலும் இது போல் பாதிப்பு ஏற்பட்டு கன்றுக்குட்டி இறந்தது தெரிந்தது.
இதனால், வெறி பிடித்த (ரேபீஸ் பாதிப்பு) தெரு நாய் அங்கு சுற்றி வருவதும், அது கடித்ததால், கன்றுக்குட்டிகள் உயிரிழந்ததும் தெரிந்தது. இதனால், அப்பகுதியினர் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகம், கால்நடை பராமரிப்புத்துறை உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும். அப்பகுதியில் ரோட்டில் வீசப்படும் உணவுக்கழிவுகள், இறைச்சிகழிவுகளை உட் கொள்ள 50 க்கு மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் வெறி பிடித்த நாய் இடம் பெற்றிருக்க வாய்ப்பு உள்ளது என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.