/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
3 வீட்டில் திருட்டு :மக்கள் அச்சம்
/
3 வீட்டில் திருட்டு :மக்கள் அச்சம்
ADDED : ஜன 13, 2024 11:35 PM
அவிநாசி:அவிநாசி அருகே மூன்று வீடுகளில் நடந்த திருட்டு குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
அவிநாசி அருகேயுள்ள வேலாயுதம்பாளையம் ஊராட்சி, சின்ன கருணை பாளையத்தைச் சேர்ந்தவர் அருள்குமார் 37. குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதனை அறிந்து கொண்ட மர்ம ஆசாமிகள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 சவரன் நகை, ரொக்கம் 60,000 ரூபாயை திருடிச்சென்றனர்.
இதபோல், ராயம்பாளையம் கிரீன் கார்டன் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் கதவை உடைத்து உள்ளே பீரோக்களில் இருந்த 8 சவரன் நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இந்த திருட்டுகள் குறித்து, அவிநாசி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

