/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கேயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 செம்மறி ஆடுகள் பலி
/
காங்கேயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 செம்மறி ஆடுகள் பலி
காங்கேயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 செம்மறி ஆடுகள் பலி
காங்கேயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 செம்மறி ஆடுகள் பலி
ADDED : செப் 19, 2024 03:37 PM

காங்கேயம்: காங்கேயம் நகராட்சி 3வது வார்டு தொட்டியபட்டி, அமராங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த மோகன்குமார், 62, விவசாயி, இவருக்கு சொந்தமான அமராங்காட்டு தோட்டத்தில் விவசாயம் மற்றும் 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை 6:00 மணிக்கு பட்டிக்கு சென்று பார்த்தபோது, இரவு நேரத்தில் வெறிநாய்கள், செம்மறி ஆடுகள் மற்றும் ஆட்டுக் குட்டிகளை கடித்து குதறியதில் 15 பெரிய ஆடுகளும், 15 ஆட்டுக்குட்டிகளும் இறந்துவிட்டன.
சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பரிசோதித்தனர். இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும்.தகவல் பரவியதும் பி.ஏ.பி., காங்கேயம் வெள்ளகோவில் கிளை நீர்பாதுகாப்பு சங்க விவசாயிகள் காங்கேயம் பஸ்நிலையம் எதிரே இறந்த ஆடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் தாசில்தார் மயில்சாமி, காங்கேயம் நகராட்சி கமிஷ்னர் கனிராஜ், காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சு வார்ததை நடத்தினர். தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.