ADDED : டிச 25, 2024 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கண்ணா அரசு கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு - 2 சார்பில், அவிநாசி அருகே கருமா பாளையத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
நேற்று, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையுடன் இணைந்து ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி துணை தலைவர் சண்முகசுந்தரம் முகாமை துவக்கி வைத்தார். மாணவர்கள், பொதுமக்கள் என பலர் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர். மொத்தம், 35 யூனிட் ரத்தத்தை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அளித்தனர். ரத்த கொடையாளர்களுக்கு டாக்டர் கலையரசி சான்றிதழ் வழங்கினார்.