/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர் நலவாரியம் சார்பில் ரூ.3.52 கோடிக்கு உதவித்தொகை
/
தொழிலாளர் நலவாரியம் சார்பில் ரூ.3.52 கோடிக்கு உதவித்தொகை
தொழிலாளர் நலவாரியம் சார்பில் ரூ.3.52 கோடிக்கு உதவித்தொகை
தொழிலாளர் நலவாரியம் சார்பில் ரூ.3.52 கோடிக்கு உதவித்தொகை
ADDED : ஜன 24, 2025 10:02 PM
- நமது நிருபர் -
நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு, கடந்தாண்டு நவ., முதல் இம்மாதம் இதுவரை, ரூ.3.52 கோடி மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியங்களின் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜன் தலைமை வகித்தார். அதில், தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செந்தில்குமார் பேசியதாவது:
திருப்பூரில், தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற முந்தைய கண்காணிப்புக்குழு கூட்டத்துக்குப்பின், கடந்தாண்டு, நவ., 1ம் தேதி முதல் இம்மாதம், 23ம் தேதி வரை, கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில், 749 பேர், உடலுழைப்பு, 872, ஓட்டுனர், 70 பேர் என, மொத்தம், 1,691 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
நலவாரிய உறுப்பினர் மற்றும் குடும்பத்தினரின் கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிட மரணம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டுவருகிறது.
அவ்வகையில், கடந்தாண்டு நவ., முதல் இம்மாதம் இதுவரை, கட்டுமானம், உடலுழைப்பு, ஓட்டுனர் நலவாரிய உறுப்பினர்களில், 4,065 பயனாளிகளுக்கு, மொத்தம் 3 கோடியே 52 லட்சத்து 55 ஆயிரத்து 950 ரூபாய் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொழிற்சங்க கண்காணிப்புக்குழுவில் உறுப்பினராக உள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழில்முனைவோர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.