/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்றும் நாளையும் 40 சிறப்பு பஸ் இயக்கம்
/
இன்றும் நாளையும் 40 சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : ஜன 24, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; வார விடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
அவ்வகையில், கோவில்வழி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, தலா, 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பத்து பஸ்கள் இயங்கவுள்ளது.
'நாளை (26ம் தேதி) குடியரசு தினம் பொது விடுமுறை என்பதால், பயணிகள் வசதிக்காக பஸ் இயக்கப்படுகிறது. பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பஸ் இயக்கமும் குறைக்கப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.