/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதுநிலை ஆசிரியர் தேர்வு 4,028 பேர் எழுதுகின்றனர்
/
முதுநிலை ஆசிரியர் தேர்வு 4,028 பேர் எழுதுகின்றனர்
ADDED : அக் 11, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், பத்து மையங்களில், இன்று முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கான தேர்வு நடக்கிறது; இத்தேர்வெழுத, 4,028 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை - 1, கணிணி பயிற்றுநர் நிலை - 1 உள்ளிட்ட பணிகளுக்கு, காலியாக உள்ள, 1,996 இடங்கள் விரைவில் நிரப்பட உள்ளது.
தேர்வு குறித்த அறிவிப்பு, ஜூலை 10ல் வெளியான நிலையில், இன்று தேர்வு நடக்கிறது. மாவட்டம் முழுதும் இத்தேர்வெழுத, 4,028 பேர் விண்ணப்பித்துள்ளனர். பத்து மையங்களில், தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்கக அதிகாரிகள், கல்வித்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.