/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'45 நாளில் பேமென்ட் நடைமுறை ஏப்ரல் முதல் அமலாக்க வேண்டும்'
/
'45 நாளில் பேமென்ட் நடைமுறை ஏப்ரல் முதல் அமலாக்க வேண்டும்'
'45 நாளில் பேமென்ட் நடைமுறை ஏப்ரல் முதல் அமலாக்க வேண்டும்'
'45 நாளில் பேமென்ட் நடைமுறை ஏப்ரல் முதல் அமலாக்க வேண்டும்'
ADDED : பிப் 15, 2024 12:02 AM

திருப்பூர், : ''45 நாளில் பேமென்ட் வழங்கும் நடைமுறையை, வரும் ஏப்., 1 முதல் அமலாக்க வேண்டும்'' என்று எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர், எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் சங்க கூட்டம், குமார் நகர், 60 அடி ரோடு, சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது.
சங்க தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். செயலாளர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், எம்.எஸ்.எம்.இ., செக்டர் பில் தொகையை, 45 நாளில் திரும்ப பெறுவது குறித்து, சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இசட் இ.டி., சான்றிதழ், பயன்பாடு குறித்து சக்திவேல் விளக்கம் அளித்தார். கடனுக்கான சலுகை இரண்டு சதவீதம், வட்டி மானியம், போக்குவரத் துறை மானியங்கள், பயன்பாடு, அசாதாரண சூழலை எப்படி எதிர்கொள்வது குறித்து குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சங்க பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
புதிய சட்டம் சிறு, குறு நிறுவனங்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது. உற்பத்தி பொருளான ரப்பர், நுால், பாலியஸ்டர் நுாலை வெளிமாநிலங்களில் இருந்து ரொக்கத்துக்கு வாங்கி கடனுக்கு விற்பனை செய்கிறோம்.
புதிய சட்டம் மூலம் கால அவகாசம் கிடைக்க பெறும். இதனை அமல்படுத்தும் காலத்தை, 2024 ஏப்.,1 என அறிவித்தால், வரும் நிதியாண்டில் வரவு - செலவு கணக்கில் பிரச்னை வராது.
விற்பனையாளர்களையும் இதற்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

