/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கஞ்சா விற்ற 6 பேர் கைது; ஆறு கிலோ பறிமுதல்
/
கஞ்சா விற்ற 6 பேர் கைது; ஆறு கிலோ பறிமுதல்
ADDED : நவ 03, 2025 11:58 PM
திருப்பூர்: திருப்பூர், கருவம்பாளையத்தில் சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த இருவரிடம் போலீசார் விசாரித்தனர். சர்தாஜ், 20, இப்ராஹீம், 18 என்பது தெரிந்தது. இருவரை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சென்ட்ரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
l திருப்பூர் தெற்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சந்தைபேட்டை அம்மா உணவகம் அருகில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று, முகமது உவைஸ், 26 மற்றும் சுஜித் சாஹூ என, இருவரை கைது செய்து, மூன்று கிலோவை பறிமுதல் செய்தனர்.
l தாராபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொள்ளாச்சி ரோடு அம்மாபட்டியில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் அறிந்து, அங்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். கஞ்சா விற்ற கோகுல், 22, பாலயுவராஜ், 22 என, இருவரை கைது செய்து, இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

