ADDED : ஆக 03, 2025 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் தாய்ப்பால் தான விழிப்புணர்வு வார விழாவையொட்டி, திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு 6.25 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கப்பட்டது.
ரோட்டரி சங்கத்தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். 6.25 லிட்டர் தாய்ப்பால் சேகரித்து தானமாக மாவட்ட திட்ட தலைவர் விசித்ரா வழங்கினார். தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள் பற்றி தாய்மார்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினர்.

