/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குப்பை கொட்ட வேண்டாம்' வீதியில் வைக்கப்பட்ட பேனர்
/
'குப்பை கொட்ட வேண்டாம்' வீதியில் வைக்கப்பட்ட பேனர்
'குப்பை கொட்ட வேண்டாம்' வீதியில் வைக்கப்பட்ட பேனர்
'குப்பை கொட்ட வேண்டாம்' வீதியில் வைக்கப்பட்ட பேனர்
ADDED : செப் 29, 2025 12:19 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட பகுதி ஜீவா நகர். அவிநாசி ரோடு காந்தி நகர் பகுதியை ஒட்டி இந்த குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியின் வீதி துவக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் ரோட்டோரம் அப்பகுதியினர் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த வார்டு பகுதியின் கவுன்சிலர் துளசிமணி (இ.கம்யூ.) வீடு இப்பகுதியில் உள்ளது. அதே போல் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் வீட்டுக்கும் இந்த வீதி வழியாகச் செல்ல வேண்டும்.
இந்நிலையில், குப்பை கொட்டும் இடத்தின் முன்புறம் மாநகராட்சி கமிஷனர் மற்றும் வார்டு கவுன்சிலர் வேண்டுகோள் விடுக்கும் வகையில், 'இந்த இடத்தில் குப்பை கொட்ட வேண்டாம். வீடு தேடி வரும் துாய்மைப் பணியாளர்கள் வசம், குப்பை சேகரிக்கும் வாகனத்தில் குப்பைகளை வழங்க வேண்டும். ெபாது இடங்களில் குப்பை ெகாட்டினால் அபராதம் விதிக்கப்படும்.குப்பைகளை தரம் பிரித்து வழங்கி மாநகராட்சிக்கு உதவுங்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.