/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்புமுனையுடன் தித்திப்பான தீபாவளி; தொழில்துறையினர் மகிழ்ச்சி
/
திருப்புமுனையுடன் தித்திப்பான தீபாவளி; தொழில்துறையினர் மகிழ்ச்சி
திருப்புமுனையுடன் தித்திப்பான தீபாவளி; தொழில்துறையினர் மகிழ்ச்சி
திருப்புமுனையுடன் தித்திப்பான தீபாவளி; தொழில்துறையினர் மகிழ்ச்சி
ADDED : நவ 01, 2024 12:53 AM
திருப்பூர் : தீபாவளி பண்டிகைக்கால ஆர்டர்கள், அனைத்து வகையிலும் மனநிறைவை அளிப்பதாக, பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூரில் உற்பத்தியாகும், பின்னலாடைகள், உள்ளாடைகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. நாடு முழுவதும் உள்ள ஜவுளிச்சந்தைகளை, திருப்பூர் ஆடைகளே அலங்கரிக்கின்றன. குறிப்பாக, திருப்பூரில் தயாராகும் உள்ளாடைகளுக்கு, நாடு முழுவதும் வரவேற்பு அதிகம்.
கொரோனா தொற்றுக்கு பின், திருப்பூர் இயல்புநிலைக்கு வந்தாலும், பல்வேறு சவால்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.
அவற்றையெல்லாம் கடந்து, இந்தாண்டு தீபாவளி விற்பனை மனநிறைவாக இருந்ததாக, உற்பத்தியாளர்கள் தெரிவத்துள்ளனர்.
ஸ்திரமான அரசு
வளர்ந்த நாடுகளுடன், இந்திய ஏற்றுமதியாளர்கள், நேரடி வர்த்தகம் நடத்தி வருகின்றனர். நமக்கு பெரிதும் போட்டியாக இருந்த சீனா, வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளில், அடிக்கடி உள்நாட்டு குழப்பம் ஏற்படுகிறது. இதனால், இந்தியா மட்டுமே, 'ஸ்திரமான' அரசு அமைப்பு கொண்ட நாடு என்று, அமெரிக்கா, ஐரோப்பியாவின் வர்த்தக நிறுவனங்கள், நம் நாட்டுடன் தொழில் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன.
இதன் காரணமாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த புதிய வர்த்தகர்கள், திருப்பூருக்கு நேரடியாக வந்து, பின்னலாடை நிறுவனங்களை பார்வையிட்டு, உற்பத்தி படிநிலைகளை ஆராய்ந்து, திருப்பூருடன் வர்த்தகம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
குளிர்கால ஆர்டர்கள் முழுமை பெற்றதும், கோடைக்கால ஆர்டர் விசாரணையும் ஆக்கப்பூர்வமாக துவங்கியுள்ளது. வழக்கமான எண்ணிக்கையை காட்டிலும், ஆர்டர் வரத்து அதிகரித்துள்ளது, இத்தீபாவளியுடன் சேர்த்து கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என, ஏற்றுமதியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இனி வேகமெடுக்கும்
''உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில், உள்ளாடைகள் மட்டுமே பிரதானமாக இருந்தது. தற்போது, பின்னலாடைகளும் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள சந்தைகளில், திருப்பூரில் உற்பத்தியான உயர்தர பருத்தி நுாலிழை பின்னலாடைகளுக்கு மவுசு என்றும் குறையவில்லை. கொரோனா தொற்றுக்கு பிறகு, இந்தாண்டு தீபாவளி விற்பனைதான் மகிழ்ச்சி அளிப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். காதர்பேட்டை விற்பனையும், நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஆக மொத்தம், நீண்ட நாட்களாக இருந்த பின்னலாடை இருப்பு, கடந்த 10 நாட்களில் காலியாகவிட்டது; இனி புதிய ஆடை உற்பத்தியும் வேகமெடுக்கும்'' என்கின்றனர் உள்நாட்டு உற்பத்தியாளர்கள்.