ADDED : செப் 30, 2025 11:56 PM
திருப்பூர்; ''போதை பழக்கம், மனதை பேதையாக்கும்'' என, சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஓவியம் வாயிலாக விளக்கினர்.
திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு 2 திட்டம் சார்பில், 'போதையில்லா தமிழகம்' என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
என்.எஸ்.எஸ்., அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார், வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பேசினார். மாணவ, மாணவியர் போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளை ஓவியம் வாயிலாக விளக்கினர்.
போதை பழக்கத்துக்கு எதிரான கருத்துக்களை மையப்படுத்தியும் ஓவியங்கள் வரைந்திருந்தனர். இதில், ஆழமான கருத்தை வலியுறுத்தி சிறந்த மூன்று ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டது.
அந்த ஓவியம்வரைந்த மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.