/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதை பொருளை அகற்ற சட்டம் தேவை: வி.எச்.பி., கூட்டத்தில் தீர்மானம்
/
போதை பொருளை அகற்ற சட்டம் தேவை: வி.எச்.பி., கூட்டத்தில் தீர்மானம்
போதை பொருளை அகற்ற சட்டம் தேவை: வி.எச்.பி., கூட்டத்தில் தீர்மானம்
போதை பொருளை அகற்ற சட்டம் தேவை: வி.எச்.பி., கூட்டத்தில் தீர்மானம்
ADDED : மார் 04, 2024 11:50 PM

உடுமலை:தமிழகத்தில், போதைப்பொருளை முழுமையாக அகற்றும் வகையில், மாநில அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடுமலையில், விஸ்வ ஹிந்து பரிஷத்தின், மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
அகில உலக இணை பொது செயலாளர் ஸ்தாணுமாலயன் கூட்டத்தை துவக்கி வைத்தார். ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில், அகில பாரத இணை செயலாளர் நாகராஜன், தென்பாரத அமைப்பாளர் கேசவராஜூ, மாநில தலைவர் ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் லட்சுமணநாராயணன், மாநில பொருளாளர் கணேஷ்குமார், கோட்ட அமைப்பு செயலாளர் சேனாதிபதி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அயோத்தியில், பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவேற பாடுபட்ட சன்னியாசி சாதுக்கள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இலங்கை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ஹிந்து வித்யாலயங்களை துவங்கி, ஹிந்து சமுதாய மக்களுக்கு தர்மத்தை போதித்த ஆறுமுக நாவலரின் பணிகளை கிராமம்தோறும், எடுத்துச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
ஆரிய சமாஜம் வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஏராளமான நபர்களை தாய்மதம் திரும்ப செய்த, தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் நினைவை போற்றும் வகையில், கிராம நகரப்பகுதிகளில், தனித்தன்மையாக விழா கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவில்களில், சமய வழிபாடு மற்றும் தரிசனத்துக்கு பல வகைகளில் கட்டணம் பெற்று வரும், ஹிந்து அறநிலையத்துறை, தற்போது ராமேஸ்வரத்தில், திதி, தர்ப்பணம் செய்ய கட்டணம் நிர்ணயித்துள்ளதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில், இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதை பழக்கம் நமது சமுதாயத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு, திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
போதை மருந்து கடத்தல் தொடர்பான அனைவர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

