/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட அறங்காவலர் குழுவுக்கு நிரந்தர அலுவலகம் அவசியம்
/
மாவட்ட அறங்காவலர் குழுவுக்கு நிரந்தர அலுவலகம் அவசியம்
மாவட்ட அறங்காவலர் குழுவுக்கு நிரந்தர அலுவலகம் அவசியம்
மாவட்ட அறங்காவலர் குழுவுக்கு நிரந்தர அலுவலகம் அவசியம்
ADDED : நவ 05, 2025 12:19 AM
திருப்பூர்: புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அறங்காவலர் குழுவுக்கு, நிரந்தர அலுவலக வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்ட அறங்காவலர் குழு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில், இன்று பொறுப்பேற்கின்றனர்.
இருப்பினும், மாவட்ட அறங்காவலர் குழுவுக்கான அலுவலகம் அமைப்பது குறித்த குழப்பம் இன்னும் நீடிக்கிறது. தமிழக அரசு நியமனம் செய்து, அரசாணை வெளியிட்டு மாவட்ட அறங்காவலர் குழு இயங்க, திருப்பூரில் அலுவலக வசதி செய்யப்படாமல் இருக்கிறது.
முதன்முறையாக, மாவட்ட குழு அமைத்த போது, ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் அறை அமைக்கப்பட்டது; கோவில் அறங்காவலர் நியமன பணிகளை, மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து, மாவட்ட குழு மேற்கொண்டு வந்தது.
குழுவின் பதிவிக்காலம் முடிந்ததும், மாவட்ட உதவி கமிஷனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த அலுவலகம் அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் மாவட்ட குழு பொறுப்பேற்றுள்ள நிலையில், மாவட்ட குழு எந்த அலுவலகத்தில் இயங்கும் என்பது தொடர்பான குழப்பம் நீடிக்கிறது.
இதுகுறித்து ஹிந்து அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள உதவி கமிஷனர் அலுவலகம், வீரராகவப்பெருமாள் கோவிலில், பக்தர்கள் கட்டிக்கொடுத்த உணவு கூடத்தில் இயங்கி வருகிறது. அலுவலக பயன்பாட்டுக்காக, அனுமந்தராயர் சன்னதி அருகே கழிப்பிடம் அமைத்துள்ளது, பக்தர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
இந்நிலையில், மாவட்ட அறங்காவலர் குழு இயங்க, புதிய அலுவலகம் அமைக்க ஒத்துழைப்பு சரிவர இல்லை என்கின்றனர். சரியான அலுவலக வசதி இருந்தால் மட்டுமே, விண்ணப்பங்களை பரிசீலித்து, கோவில் அறங்காவலர் நியமன பணியை மேற்கொள்ள முடியும். எனவே, இணை ஆணையர் இதுதொடர்பாக, தகுந்த உத் தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

