ADDED : பிப் 12, 2026 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடம், -மங்கலம் ரோடு, எஸ்.ஏ.பி. நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டது. வாட்டம் இல்லாமல் கட்டப்பட்டபோது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும்,எதிர்ப்பை மீறி அமைக்கப்பட்டது. குடியிருப்பினர் புகார் அடிப்படையில், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிகாரிகள், அதன் பிறகு இப் பிரச்னையை மறந்தனர்.
அப்பகுதியினர் கூறுகையில், 'வடிகாலில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. நகராட்சி அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு முழு காரணம். வடிகாலை சீரமைக்க வேண்டும்' என்றனர்.

