தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்

 சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்

 சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்


ADDED : பிப் 12, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் தினந்தோறும் போராட்டங்கள் தொடர்கின்றன. நேற்று, மூன்று வெவ்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழு (ஆக்டோ ஜியோ), சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம், சத்துணவு ஊழியர் - அங்கன்வாடி ஊழியர் கூட்டமைப்பு சார்பில், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3ம் தேதி முதல் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றுவருகிறது.

அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், கலெக்டர் அலுவலகம் முன், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்பதாவது நாளான நேற்றும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காய்கறி, மளிகை பொருட்கள் கொண்டுவந்து, கலெக்டர் அலுவலகம் முன், கேஸ் அடுப்பு வைத்து, கலவை சாதம் உணவு தயாரித்து, உட்கொண்டனர்.

'தமிழக அரசு, கால முறை ஊதியம் வழங்கவேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் வரிசையில் நின்று, மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

n நிலையான காலமுறை ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, கிராம உதவியாளர்கள், கடந்த 5ம் தேதி முதல், கலெக்டர் அலுவலக வளாகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழாவது நாளாக நேற்றும், கிராம உதவியாளர்கள், காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us