/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டில் பூட்டியே கிடக்கும் பாலுாட்டும் தாய்மார்களுக்கான அறை
/
பஸ் ஸ்டாண்டில் பூட்டியே கிடக்கும் பாலுாட்டும் தாய்மார்களுக்கான அறை
பஸ் ஸ்டாண்டில் பூட்டியே கிடக்கும் பாலுாட்டும் தாய்மார்களுக்கான அறை
பஸ் ஸ்டாண்டில் பூட்டியே கிடக்கும் பாலுாட்டும் தாய்மார்களுக்கான அறை
UPDATED : ஆக 14, 2025 06:28 AM
ADDED : ஆக 13, 2025 07:37 PM

உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்டில், பாலுாட்டும் தாய்மார்களுக்கான அறையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு குழந்தைகள் வளர்ச்சி திட்டம் நட வடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை பஸ் ஸ்டாண்டில், நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பயணியர் வந்துசெல்கின்றனர். இதில், உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்கும், மூணார் வரை என குழந்தைகளுடன் பயணம் செய்யும் தாய்மார்களும் அதிகம் உள்ளனர்.
அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அங்கு இருந்தும், பயன்படுத்த முடியாமல் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் பாலுாட்டும் தாய்மார்களுக்கான தனி அறை உள்ளது. இந்த அறை எப்போதும் பூட்டிய நிலையில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. ஆனால் அதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்த அறைகள் திறக்கப்படவில்லை.
பச்சிளம் குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், தங்களின் குழந்தைகளுக்கு பசியாற்றவும் முடியாமல் தவிக்கின்றனர். தாய்மார்களுக்கான இந்த அறையை செயல்பாட்டுக்கு விடுவதற்கும், முறையாக பராமரிக்காமல் நகராட்சி நிர்வாகம் முடக்குகிறது.
நீண்ட துாரம் பயணம் செய்யும் தாய்மார்கள், தங்களின் குழந்தைகளின் பசியாற்ற கடைகளில் அனுமதி கேட்கும் அவலத்தில் உள்ளனர். கூட்ட நெரிசலான நாட்களில் அதற்கும் வழியில்லாமல், வேதனையுடன் பயணம் செய்யும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், தாய்மார்களுக்கான அடிப்படை வசதிகளை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.