/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப சிறப்பு நேர்காணல் இன்று நடக்கிறது
/
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப சிறப்பு நேர்காணல் இன்று நடக்கிறது
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப சிறப்பு நேர்காணல் இன்று நடக்கிறது
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப சிறப்பு நேர்காணல் இன்று நடக்கிறது
ADDED : அக் 21, 2024 06:32 AM
உடுமலை : உடுமலை வட்டாரத்தில், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கு, சிறப்பு நேர்காணல் இன்று நடக்கிறது.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதில், ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால், சில அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
உடுமலை வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பல காலியாக உள்ளன.
மாணவர்களின் நலன் அடிப்படையில், பள்ளி மேலாண்மைக்குழுவின் வாயிலாக, தற்காலிகமாக இப்பணியிடங்களை நிரப்புவதற்கு, இன்று (21ம் தேதி) சிறப்பு நேர்காணல் நடக்கிறது.
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, பி.எட்., படிப்புடன், தகுதித்தேர்வு தாள் - 2ல் தேர்ச்சி பெற்ற தற்காலிக பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். அப்பணியிடங்களுக்கான தொகுப்பு ஊதியம் மாதம், 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்துக்கு, ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் - 1ல் தேர்ச்சி பெற்ற, தற்காலிக இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கான தொகுப்பு ஊதியம் மாதம், 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய அசல் சான்றிதழ்களுடன், உடுமலை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று காலை, 11:00 மணிக்கு நடக்கும் நேர்காணலில் பங்கேற்கலாம்.
காலியாக உள்ள பணியிடங்கள்
ருத்தரப்ப நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, கணக்கம்பாளையம் நடுநிலைப்பள்ளி, போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பார்த்தசாரதிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
குருமலை, குழிப்பட்டி, கோடந்துார், மாவடப்பு, மாவலம்பாறை, தளிஞ்சி, ஜக்கம்பாளையம், பழநிரோடு உள்ளிட்ட பகுதி அரசு துவக்கப்பள்ளிகளிலும் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
உரல்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல், சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல், சமூக அறிவியல், கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.