/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்பதிவில்லா சிறப்பு ரயில் சென்னைக்கு இயக்க வேண்டும்
/
முன்பதிவில்லா சிறப்பு ரயில் சென்னைக்கு இயக்க வேண்டும்
முன்பதிவில்லா சிறப்பு ரயில் சென்னைக்கு இயக்க வேண்டும்
முன்பதிவில்லா சிறப்பு ரயில் சென்னைக்கு இயக்க வேண்டும்
ADDED : அக் 16, 2025 11:29 PM
திருப்பூர்: கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சென்னைக்கு வந்தே பாரத், சதாப்தி, இன்டர்சிட்டி, கோவை, சேரன், நீலகிரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் முன் பதிவு பெட்டிகளுக்கான, காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது.
தீபாவளியை முன்னிட்டு, இவற்றில் முன்பதிவு ஒன்றரை மாதம் முன்பே நிரம்பிவிட்டது; காத்திருப்போர் பட்டியல் மூன்று இலக்கத்தை எட்டியுள்ளது. வரும், 18 மற்றும் 19ம் தேதிகளில், 180 முதல் 290 பேர் வரை சென்னை செல்லும் ரயிலுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
தொடர் விடுமுறையை முன்னிட்டு, பண்டிகை கால சிறப்பு ரயிலாக மதுரை - சென்னை இடையே முன்பதிவில்லா 'மெமு' ரயில் இயக்கப்பட்டது. உடனடி டிக்கெட் பெற்று பயணிகள் நிம்மதியாக பயணித்தனர். அதே போல், கோவை - சென்னை இடையேயும் மெமு ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்
கேட்பது ஏன்? கோவை, திருப்பூர், ஈரோடு இடையே சேலம் முதல் சென்னை வரையும், 60க்கும் அதிகமான ஸ்டேஷன்கள் உள்ளன. திருப்பத்துார் தனி மாவட்ட உள்ள போதும், கோவையில் இரு ந்து சென்னை செல்லும் பல ரயில்கள் இங்கு நிற்பதில்லை. வாணியம்பாடி, குடியாத்தம், பொம்மிடி, மொரப்பூர், ஆம்பூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களும் புறக்கணிக்கப்படுகிறது.
கோவை - சென்னை இடையே முன்பதிவு ரயில் இயக்கினால், இப்பகுதியினர் பயணிக்க வசதியாக இருக்கும். வரும் 18, 19ம் தேதிகளில் இயங்கும் வகையில் மெமு ரயில் அறிவிக்கப்பட வேண்டும்.