/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விஷக்கடி மருந்து தட்டுப்பாடா? அரசு மருத்துவமனையில் ஆய்வு
/
விஷக்கடி மருந்து தட்டுப்பாடா? அரசு மருத்துவமனையில் ஆய்வு
விஷக்கடி மருந்து தட்டுப்பாடா? அரசு மருத்துவமனையில் ஆய்வு
விஷக்கடி மருந்து தட்டுப்பாடா? அரசு மருத்துவமனையில் ஆய்வு
ADDED : அக் 16, 2025 11:28 PM
திருப்பூர்: விஷக்கடி மருந்து இல்லையென்று, ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் பாம்பு கடித்தவர் திருப்பூருக்கு அனுப்பப்பட்டதாக முதல்வருக்கு புகார் சென்றது. இதையடுத்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2015ல் ஊத்துக்குளி, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அறுபது படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
தற்போது, மாதம் 5 ஆயிரம் பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்று செல்கின்றனர். உள்நோயாளிகளாக, 200 முதல், 250 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். தலைமை மருத்துவர் மற்றும் ஆறு உதவி மருத்துவர்கள், ஆறு செவிலியர்கள், தொகுப்பூதியத்தில், இரண்டு பேர் பணியாற்றுகின்றனர்.
தாலுகா அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட பின்பும், நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. சமீபத்தில், பாம்பு கடித்து, விஷக்கடிக்கு அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது, மருந்து இருப்பு இல்லையென்று, திருப்பூருக்கு அனுப்பியுள்ளனர்.
தொடர்ச்சியாக புகார்கள் சென்றநிலையில், ஊத்துக்குளியை சேர்ந்த கருப்பசாமி என்பவர், முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தார். இதுதொடர்பாக, ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மீரா தலைமையில், ஆய்வு செய்யப்பட்டது.
இதற்கான விளக்கத்தில், ''மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், நோயாளிகளுக்கு சிறந்த முறையில் மருத்துவ சேவை செய்து வருகிறோம். பணிபுரியும் மருத்துவர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக அறுவை சிகிச்சை செய்வதற்கு சொந்த கருவிகளை தினமும் எடுத்து வந்து அறுவை சிகிச்சை செய்வதாகவும், பல்வேறு நன்கொடையாளர்களிடம் உபகரணங்கள் பெற்று பல அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது'' என்று, மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.