/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆதார் சிறப்பு முகாம் பொதுமக்கள் ஆர்வம்
/
ஆதார் சிறப்பு முகாம் பொதுமக்கள் ஆர்வம்
ADDED : பிப் 16, 2025 02:43 AM

அவிநாசி: இந்திய அஞ்சல் துறை, ரோட்டரி கிளப் ஆப் அவிநாசி, ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஆகியன இணைந்து நடத்திய ஆதார் முகாம் மக்களுக்கு பெரிதும் பயனளித்தது.
அவிநாசி, மங்கலம் ரோட்டில், ரோட்டரி அரங்கத்தில் மூன்று நாட்கள் நடக்கும் இம்முகாம், இன்றுடன் முடிவடைகிறது. ஐந்து முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கைரேகைகள், கண் கருவிழி புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. முகவரி, பெயர், பாலினம், மொபைல், மின்னஞ்சல், பிறந்த தேதி மற்றும் புகைப்படம் புதுப்பித்தல் ஆகிய வற்றுக்கு, 50 ரூபாய், பயோ மெட்ரிக் புதுப்பித்தலுக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
முகாமை, ரோட்டரி மாவட்ட கவர்னர் தேர்வு (2026--27) பூபதி, ரோட்டரி அவிநாசி தலைவர் தண்டபாணி, அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் தலைவர் சதாசிவம், செயலாளர் சங்கீதா, மனோஜ்குமார், திட்டத் தலைவர் விஸ்வநாதன் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள்பார்வையிட்டனர்.

