ADDED : ஏப் 15, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம்,- திருப்பூர் ரோடு, டி.கே.டி., மில் பஸ் ஸ்டாப்பில் இருந்து கணபதிபாளையம் செல்லும் ரோடு, கணபதிபாளையம், கள்ளிமேடு, சிங்கனுார் வழியாக, கோவை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கிறது.
பிரதான இணைப்பு சாலையாக உள்ள இந்த ரோடு, எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இந்த ரோட்டில், டி.கே.டி., மில் சிக்னல் அருகே, குடிநீர் குழாய் இணைப்புக்காக சிமென்ட் சிலாப் அமைக்கப்பட்டுள்ளது.
சிலாப் தாறுமாறாக இருப்பதுடன், இப்பகுதி பள்ளமாகவும் இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறியபடி செல்கின்றனர். விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. சிலாப்பை சீரமைக்க வேண்டும்.

