/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அடிப்படை வசதியை நிறைவேற்றுங்க... பி.டி.ஓ., ஆபீசில் குடியேறும் போராட்டம்
/
அடிப்படை வசதியை நிறைவேற்றுங்க... பி.டி.ஓ., ஆபீசில் குடியேறும் போராட்டம்
அடிப்படை வசதியை நிறைவேற்றுங்க... பி.டி.ஓ., ஆபீசில் குடியேறும் போராட்டம்
அடிப்படை வசதியை நிறைவேற்றுங்க... பி.டி.ஓ., ஆபீசில் குடியேறும் போராட்டம்
ADDED : அக் 23, 2024 06:29 AM

அவிநாசி : அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, மா.கம்யூ., சார்பில், பி.டி.ஓ., ஆபீசில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சி பகுதிகளில் சாலை, சாக்கடை கால்வாய், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதாக, ஜூலையில் நடந்த போராட்டத்தின் போது, பி.டி.ஓ., உறுதி அளித்தார். ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை. இதனை கண்டித்து, தெற்கு கிளை மா.கம்யூ., சார்பில், சமையல் பாத்திரங்களுடன், பொதுமக்களுடன், பி.டி.ஓ., ஆபீசில் குடியேறும் போராட்டம் நேற்று நடைபெற்றது. வஞ்சிபாளையம் தெற்கு கிளை செயலாளர் ஹனிபா தலைமை வகித்தார்.
ஒன்றிய கவுன்சிலர் முத்துச்சாமி, மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பழனிசாமி, வெங்கடாசலம், தேவி உட்பட பலர் கோரிக்கை குறித்து பேசினர். தகவல் அறிந்த டி.எஸ்.பி., சிவகுமார், பி.டி.ஓ.,க்கள் ரமேஷ்குமார், விஜயகுமார் ஆகியோர், மக்களிடம் பேசினர்.
அதில், 25 நாட்களுக்குள் பணிகள் முடித்து தரப்படும் என்றும், பொன் ராமபுரத்தில் சமுதாய நலக்கூடத்துக்கு காவலாளி என்ற பெயரில் மாதந்தோறும் 9,300 ரூபாய் பிடித்தம் செய்துள்ளதை, ஊராட்சி நிதிக்கு திரும்ப செலுத்தப்படும் என்று உறதியளிக்கப்பட்டது. இதனால், போராட்டம் கைவிடப்பட்டது.