/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செம்மையான வாக்காளர் பட்டியல் : அ.தி.மு.க. பிரசாரத்தில் விழிப்புணர்வு
/
செம்மையான வாக்காளர் பட்டியல் : அ.தி.மு.க. பிரசாரத்தில் விழிப்புணர்வு
செம்மையான வாக்காளர் பட்டியல் : அ.தி.மு.க. பிரசாரத்தில் விழிப்புணர்வு
செம்மையான வாக்காளர் பட்டியல் : அ.தி.மு.க. பிரசாரத்தில் விழிப்புணர்வு
ADDED : நவ 16, 2025 12:38 AM

திருப்பூர்: 'செம்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்க, அ.தி.மு.க., வினர் ஒத்துழைக்க வேண்டும்' என்று திண்ணை பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., வின் ஜெ., பேரவை சார்பில், வாரம் தோறும் திண்ணை பிரசாரம் நடந்து வருகிறது. அதன்படி, திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட நல்லுார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, திண்ணை பிரசாரம் நடந்தது.
ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ., விஜயகுமார், பகுதி செயலாளர்கள் முத்து, கோபால்சாமி, தினேஷ், ஹரிஹரசுதன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
முன்னதாக, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி, அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த திட்ட பணிகள் குறித்தும், தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட வரி உயர்வு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குறிப்பாக, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதன்மூலமாக, இறந்த வாக்காளர், போலி வாக்காளர் நீக்கப்பட வேண்டும். அதற்காக, ஒவ்வொரு குடும்பத்தினரும், தங்களது விவரங்களை முறையாக பதிவு செய்து, செம்மையான பட்டியல் தயாரிக்க ஒத்துழைக்க வேண்டும். கட்சியின் பூத் ஏஜன்டுகள், பாக முகவர்களும் அதற்கான பணிகளில் கவனம் செலுத்தி, மக்களுக்கு உதவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது .

