/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ரவுண்ட்டேபிள்' சார்பில் 200 மரக்கன்று நடவு
/
'ரவுண்ட்டேபிள்' சார்பில் 200 மரக்கன்று நடவு
ADDED : நவ 16, 2025 12:39 AM

திருப்பூர்: திருப்பூர் ரவுண்ட்டேபிள்' வார விழாவின் ஒரு பகுதியாக, மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
'திருப்பூர் ரவுண்ட் டேபிள்' மற்றும் திருப்பூர் பெண்கள் வட்டம் சார்பில், விழிப்புணர்வு வாரவிழா நடந்து வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நல உதவி, ரத்ததான முகாம், மரக்கன்று நடவு என, பல்வேறு சேவை பணிகள் நடந்து வருகின்றன.
மரக்கன்று நடும் திட்ட பணி நேற்று முன்தினம் நடந்தது. அமைப்பு நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் இணைந்து, திருப்பூர் கே.பி.என்., காலனி பகுதியில் உள்ள,'அய்லா' கார்டனில், 200க்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இதுகுறித்து நிர்வாகி விக்ரம் கூறுகையில்,'பூமிக்கு உயிரூட்டி, நமது எதிர்காலத்துக்கு நம்பிக்கை அளிக்கிறோம். விரியும் ஒவ்வொரு இலையும், ஆழமாக செல்லும் ஒவ்வொரு வேர்களும், அடுத்த தலைமுறைக்கு நாம் அளிக்கும் வாக்குறுதியாகும்.
எதிர்காலம் மீது நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். சிறிய செயல்களாக இருந்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து மரம் வளர்ப்போம்; வீட்டுக்கு ஒரு மரமாவது வளர்ப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,'' என்றார்.

