/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ-சேவை மையத்தில் கூடுதல் வசதி! அவதிப்படும் மக்கள் கோரிக்கை
/
இ-சேவை மையத்தில் கூடுதல் வசதி! அவதிப்படும் மக்கள் கோரிக்கை
இ-சேவை மையத்தில் கூடுதல் வசதி! அவதிப்படும் மக்கள் கோரிக்கை
இ-சேவை மையத்தில் கூடுதல் வசதி! அவதிப்படும் மக்கள் கோரிக்கை
ADDED : அக் 08, 2024 12:18 AM
உடுமலை : உடுமலை தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள, இ - சேவை மையத்தில், வசதிகளை மேம்படுத்தி, மக்கள் அலைக்கழிப்பதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில், அரசு கேபிள் வாரியம் சார்பில், 'இ--சேவை' மையம், கடந்த, 2015ல் துவங்கப்பட்டது. தாலுகாவில், 5 உள்வட்டங்களும், 75 வருவாய் கிராமங்களும் உள்ளன.
இப்பகுதியை சேர்ந்த மக்கள், ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி உட்பட சான்றிதழ்களுக்கு நேரடியாக இ- சேவை மையத்தில், விண்ணப்பிக்கலாம்.
மேலும், ஆதார் அடையாள அட்டை புதிதாக பெறுதல், திருத்தங்கள் உட்பட சேவைகளுக்கு, தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள, இ - சேவை மையத்தையே மக்கள் நம்பியுள்ளனர்.
ஆனால், இம்மையத்தில், போதிய வசதி இல்லாததால், தொலைதுார கிராமங்களில் இருந்து, வரும் மக்கள் பல மணி நேரம் காத்திருந்து, விண்ணப்பிக்க முடியாமல், வேதனையுடன் திரும்பி செல்ல வேண்டியுள்ளது.
குறைந்தளவு டோக்கன்களே வினியோகிக்கப்படுவதால், காலை, 7:00 மணி முதலே மக்கள் அங்கு காத்திருக்கின்றனர். போதிய இருக்கை, இட வசதி இல்லாததால், மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, அரசு இ - சேவை மையத்தை, விரிவுபடுத்தி, கூடுதல் கம்ப்யூட்டர்கள், ஸ்கேனர்கள் ஒதுக்கீடு செய்து, பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப, தற்போதுள்ள, கம்ப்யூட்டர்கள் மற்றும் கருவிகள் இல்லை. இதனால், அங்குள்ள பணியாளர்களும் திணறுகின்றனர்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றினால், அரசு இ - சேவை மையங்களின் சேவை குறைபாடுகளை பயன்படுத்தி, மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் செயல்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.