/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அகத்தி பூ விற்பனையில் கூடுதல் வருவாய்
/
அகத்தி பூ விற்பனையில் கூடுதல் வருவாய்
ADDED : செப் 26, 2025 09:40 PM
உடுமலை:
வாழை சாகுபடியில், காற்றுத்தடுப்பானாக பராமரிக்கப்படும் அகத்தி மரங்களில் பெறப்படும் பூக்களை விற்பனை செய்து, விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
உடுமலை ஏழு குள பாசன பகுதிகளான, போடிபட்டி, வடபூதனம், பள்ளபாளையம் சுற்றுப்பகுதிகளில், வாழை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலை வாழை, நேந்திரன் உள்ளிட்ட ரகங்கள் ஆண்டு முழுவதும் சாகுபடியாகிறது. இச்சாகுபடியில் பிரதான பிரச்னையாக அதிக காற்று உள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, காற்றுத்தடுப்பானாகவும், வரப்பு பயிராகவும், அகத்தி மரங்கள் நட்டு பராமரிக்கின்றனர்; குறைவான பரப்பில், தனிப்பயிராகவும் இம்மரங்கள் வளர்க்கப்படுகிறது.
இம்மரங்களில் இருந்து பெறப்படும், பூக்கள், உடுமலை சந்தையில், பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக கருதப்படும், அகத்தி பூவுக்கு, சந்தையில், கிராக்கி உள்ளது.
வழக்கமாக, 'இவ்வகை பூ, கிலோ 80 ரூபாய் வரை விற்பனையாகிறது. தட்டுப்பாடு அதிகரிக்கும் போது, கிலோ நுாறு ரூபாயை தாண்டும்; அகத்தி பூக்கள் விற்பனையால், கூடுதல் வருவாய் கிடைக்கிறது, ' என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.