தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஆபத்தை ஏற்படுத்தும் விளம்பர போர்டுகள்

ஆபத்தை ஏற்படுத்தும் விளம்பர போர்டுகள்

ஆபத்தை ஏற்படுத்தும் விளம்பர போர்டுகள்


UPDATED : நவ 06, 2026 07:47 PM

ADDED : நவ 06, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:47 PM ADDED : நவ 06, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் புஷ்பா சந்திப்பில் சாலையையும் நடைபாதையையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர், குமரன் ரோடு, காலேஜ் ரோடு, அவிநாசி ரோடு, பி.என். ரோடு ஆகிய முக்கிய சாலைகள் சந்திக்கும் புஷ்பா சந்திப்பு, ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடை மற்றும் வடக்கு நுழைவாயில் அமைந்துள்ள பகுதியாகும். இதனால், இப்பகுதியில் எப்போதும் வாகனப் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், அங்குள்ள சில வணிக நிறுவனங்கள் தங்கள் வளாகங்களுக்கு முன்பாகவும் சாலையோரங்களிலும் விளம்பரப் பலகைகளை வைத்துள்ளன. சிலர் விற்பனைப் பொருட்களையும் சாலை வரை பரப்பி வைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

பஸ் நிறுத்தப் பகுதியில் விளம்பரப் பலகைகள் நடைபாதையை ஆக்கிரமிப்பதால், பயணிகள் சாலையில் இறங்கி பஸ்சுக்காக காத்திருக்கும் ஆபத்தான நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கிறது. எனவே, இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us