/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வாழை மரத்துக்கு முட்டு: விவசாயிகளுக்கு 'அட்வைஸ்'
/
வாழை மரத்துக்கு முட்டு: விவசாயிகளுக்கு 'அட்வைஸ்'
PUBLISHED ON : நவ 09, 2025 12:00 AM
திருப்பூர்: தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் இணைந்து, திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர காலநிலை விவரம் வெளியிட்டு வருகின்றன.அதன்படி வரும், 12ம் தேதி வரை, திருப்பூரில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்.
அடுத்த, 5 நாட்களுக்கு லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புண்டு. அதிகபட்ச வெப்பநிலை, 31 முதல், 32 டிகிரி செல்சியஸாக இருக்கும்; குறைந்தபட்ச வெப்பநிலை, 22 டிகிரி செல்சியசாக இருக்கும்.காலை நேரத்தில், காற்றின் ஈரப்பதம், 75 முதல், 85 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 65 முதல், 70 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புண்டு. சராசரியாக காற்று, மணிக்கு, 6 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
ஐந்து மாதங்களுக்கு மேல் உள்ள மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும்.பயிர் விதைப்பு, நடவு செய்தல், நீர் பாசனம், உரமிடுதல், மருந்து தெளித்தல் மற்றும் பிற பயிர் மேலாண்மை நடவடிக்கைகளை வரும் நாட்களிலும் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

