/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
17 ஆண்டு இழுபறிக்கு பின் வேகம் அணைப்பாளையம் பாலம் பணிகள் அதிவேகம்
/
17 ஆண்டு இழுபறிக்கு பின் வேகம் அணைப்பாளையம் பாலம் பணிகள் அதிவேகம்
17 ஆண்டு இழுபறிக்கு பின் வேகம் அணைப்பாளையம் பாலம் பணிகள் அதிவேகம்
17 ஆண்டு இழுபறிக்கு பின் வேகம் அணைப்பாளையம் பாலம் பணிகள் அதிவேகம்
ADDED : ஏப் 18, 2025 11:45 PM

திருப்பூர்: திருப்பூர், மங்கலம் ரோடு மற்றும் காலேஜ் ரோடுகளை இணைக்கும் வகையில், அணைப்பாளையம் பகுதியில், நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டவும், தண்டவாளத்தின் குறுக்கே, ரயில்வே மேம்பாலம் கட்டவும், 19.29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கட்டுமானம் மேற்கொள்ள தனியாருக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்த வேண்டியிருந்தது.
நெடுஞ்சாலைத்துறைக்குசாதகமாக தீர்ப்பு
நில உரிமையாளர்களுக்கு இதுதொடர்பான 'நோட்டீஸ்' வழங்கி, நிலம் கையகப்படுத்துவதற்கான பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் (கட்டுமானம்) ஈடுபட்டனர். அதே நேரம், கட்டுமானப்பணியும் துவங்கியது. நிலம் கையகப்படுத்த பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிலர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். வழக்கை எதிர்கொண்டு, விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கையில் தொய்வு நீடித்த நிலையில், பாலம் கட்டுமானப் பணியிலும் தொய்வு நீடித்தது.
கடந்தாண்டு, பாலம் கட்டுமானப்பணிக்கு நிலம் எடுப்பு தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து, கோர்ட்டில் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்கு களும், தள்ளுபடி செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
திட்ட மதிப்பீடு அதிகரிப்பு
அங்கு கட்டுமானப்பணி தொடர்பாக வடிவமைக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், கட்டுமானப் பொருட்கள் விலையேற்றம் தென்பட்டன. மறு வடிவமைப்பு மாற்றம், கூடுதல் நிதி உள்ளிட்ட தேவை தொடர்பாக, நெடுஞ்சாலைத்துறையினர் அரசுக்கு கடிதம் அனுப்பினர்.
அதன்படி, பணியை நிறைவு செய்ய, 42 கோடி ரூபாய் நிதி தேவை என திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிதியும் பெறப்பட்ட நிலையில் பணிகள் வேகமெடுத்துள்ளன.
அதிகாரிகள் கூறுகையில் ''பாலம் அமைக்கும் பணியில், '3 டெக்' போடப்பட்டுவிட்டது. வேலம்பாளையம் பகுதியில் பாலத்தையொட்டி தடுப்புச்சுவர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சர்வீஸ் ரோடு பணிகள் நடந்து வருகின்றன. பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றனர்.