/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வணிக வீதிகளில் ஆக்கிரமிப்பு பொதுமக்கள் தவிப்பு
/
வணிக வீதிகளில் ஆக்கிரமிப்பு பொதுமக்கள் தவிப்பு
ADDED : நவ 22, 2024 10:52 PM
உடுமலை: உடுமலையில், வணிக வளாக வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதை, நகராட்சி அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்.
உடுமலை நகரின் வணிக வீதிகளான பசுபதி வீதி, சீனிவாசா வீதி, வ.உ.சி., வீதி, சரவணா வீதிகளில் மக்கள் நிம்மதியாக நடப்பதற்கும், வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்வதற்கும் முடியாமல் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
நடைபாதையில் வணிக கடைகளின் பொருட்களை வைத்தும், வாகனங்களை நிறுத்தியும் ஆக்கிரமிக்கின்றனர். இதனால் மக்கள் ரோட்டில் இறங்கி நடக்கின்றனர்.
வ.உ.சி., ரோடும் மிகவும் குறுகலாக இருப்பதால், வாகனங்கள் நடந்து செல்வோரை உரசும் வகையில் தான் செல்கின்றன. பொதுமக்கள் ரோட்டில் நடப்பதால், வாகன ஓட்டுநர்களும் மற்ற வாகனத்தை கடந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கும் வழியில்லாமல் சிக்கலாகிறது. மருத்துவமனைகளிலும் முறையான பார்க்கிங் வசதி இல்லாமல், வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.
இதனால், வீதியில் செல்வோருக்கும் இடையூறு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் இவ்வாறு ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க, ஆய்வு செய்து அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.