/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்ஜெட்டில் புறக்கணிப்பு விவசாய சங்கம் கண்டனம்
/
பட்ஜெட்டில் புறக்கணிப்பு விவசாய சங்கம் கண்டனம்
ADDED : பிப் 21, 2024 12:38 AM
திருப்பூர்,:'வேளாண் பட்ஜெட்டில், கொங்கு மண்டல விவசாயிகளின் கோரிக்கை எதுவும் ஏற்கப்படவில்லை,' என, களஞ்சியம் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
களஞ்சியம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கூறியதாவது:
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்; துவக்க விழா தேதியை விரைவில் வெளியிட வேண்டும். பாண்டியாறு - புன்னம்புழா திட்டம், ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிட வேண்டும்.
பனை மரங்களில் இருந்து, 'நீரா' இறக்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை, அரசின் கவனத்துக்கு தொடர்ந்து கொண்டு சென்றோம்.
விவசாயத்துக்கு தனி பட்ஜெட் என்ற தமிழக அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவிக்கும் அதே நேரம், கொங்கு மண்டல விவசாயிகள் முன்வைத்த எந்தவொரு கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.

