sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வேளாண் துறை மார்க்கெட்டிங் பணி; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

/

வேளாண் துறை மார்க்கெட்டிங் பணி; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

வேளாண் துறை மார்க்கெட்டிங் பணி; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

வேளாண் துறை மார்க்கெட்டிங் பணி; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு


ADDED : பிப் 10, 2025 11:54 PM

Google News

ADDED : பிப் 10, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'உணவு உற்பத்தியை பெருக்கும் பணியை மேற்கொள்ள வேண்டிய வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையினர், இடுபொருட்களை விற்பனை செய்யும் மார்க்கெட்டிங் பணியை செய்து வருகின்றனர்' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:

உழவர் நலத்துறை சார்ந்த அனைத்து துறைகளையும் உள்ளடக்கி, விவசாயிகள் நலன் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்ட, 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0', கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

வேளாண்மை துறை என்பது விவசாயிகளை சந்தித்து, நாட்டு மக்களுக்கு தேவையான உணவு உற்பத்தியை அதிகரிக்க வழிகாட்டி, தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க வேண்டும்.ஆனால், இதை தவிர்த்து உரம், மருந்து மற்றும் இடுபொருட்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் வேலையை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையினர் செய்கின்றனர்.

வேளாண் இடுபொருட்களை, விவசாயிகள் மானியத்தில் வாங்கும் போது, கூடுதலாக சில பொருட்களையும் விவசாயிகளிடம் திணிக்கின்றனர்.

உதாரணமாக, தார்பாலின் வாங்கும் போது, ஒரு பாட்டில் உயிர் உரம், ஒரு மூட்டை கலப்பு உரத்தை வாங்குமாறு நிர்பந்திக்கின்றனர்.

மானியத் திட்டங்களில் ஊழல் மலிந்து கிடக்கிறது.வேளாண் விளை பொருட்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டிய வேளாண் வணிக துறையினர், உழவர் சந்தை நடத்தும் பணியை மட்டுமே கவனிக்கின்றனர். விவசாயிகளின் உபரி உற்பத்தியை சந்தைப்படுத்தி கொடுப்பதில்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.

'தி.மு.க., அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகள்'

''தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகளை அளித்தது. அதில், 27 முதல், 110 வரையிலான, 83 வாக்குறுதிகள் நீர் வளம் மற்றும் வேளாண் தொழில் தொடர்புடையது.

இதில், விவசாயிகளுக்கு பயன்தராத, 10 திட்டங்களை மட்டும் அறிவித்துவிட்டு, எஞ்சியவற்றை கிடப்பில் போட்டுள்ளனர். நெல்லுக்கு கொள்முதல் விலையாக, குவின்டாலுக்கு, 2,500 ரூபாய்; கரும்புக்கு, டன்னுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படும். 'ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்' என்பது போன்ற விவசாயிகள் நலன் சார்ந்த வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தமிழக பட்ஜெட்டின் போது, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிதிகளின் ஆலோசனை கேட்கப்படுவதே இல்லை; அவர்களது யோசனை ஏற்கப்படுவதுமில்லை'' என்றார் ஈசன் முருகசாமி.






      Dinamalar
      Follow us