sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அ.தி.மு.க., - இ.கம்யூ., - பா.ஜ., கவுன்சிலர்கள் வெளிநடப்பு! ஓயவில்லை மாநகராட்சி சொத்து வரி விவகாரம்

/

அ.தி.மு.க., - இ.கம்யூ., - பா.ஜ., கவுன்சிலர்கள் வெளிநடப்பு! ஓயவில்லை மாநகராட்சி சொத்து வரி விவகாரம்

அ.தி.மு.க., - இ.கம்யூ., - பா.ஜ., கவுன்சிலர்கள் வெளிநடப்பு! ஓயவில்லை மாநகராட்சி சொத்து வரி விவகாரம்

அ.தி.மு.க., - இ.கம்யூ., - பா.ஜ., கவுன்சிலர்கள் வெளிநடப்பு! ஓயவில்லை மாநகராட்சி சொத்து வரி விவகாரம்

1


ADDED : பிப் 01, 2025 12:31 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:31 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; சொத்து வரி உயர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றாததால், திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இ.கம்யூ., மற்றும் பா.ஜ., கவுன்சிலர்களும் வரி உயர்வு பிரச்னையைச் சுட்டிக்காட்டி வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு நிலவியது.

திருப்பூர் மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் துவங்கியதும், அன்பகம் திருப்பதி தலைமையில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள், சொத்து வரி உயர்வு பிரச்னையில், மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற கோரி மேயரிடம் மனு அளித்தனர். ''அரசு வழிகாட்டுதலின் படி துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்ட பின் தான் தீர்மானம் நிறைவேற்ற முடியும். இருநாள் முன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து நல்லதொரு பதிலை எதிர்பார்க்கிறோம்'' என்று மேயர் கூறினார்.

அ.தி.மு.க.,வினர்அதிருப்தி


மேயர் பதிலால் அ.தி.மு.க.,வினர் திருப்தியடையவில்லை.

தீர்மானம் நிறைவேற்ற மறுப்பதைக் கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர். அதன்பின், மன்ற அரங்கின் முன்புறம் தரையில் அமர்ந்து, அலுவலக வாயிலில் நின்றும், சொத்து வரி உயர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.இதேபோல், விவாதத்தில் கலந்து கொண்ட ரவிச்சந்திரன் தலைமையிலான இ.கம்யூ., கவுன்சிலர்கள், வரி உயர்வு பிரச்னையை சுட்டிக்காட்டி, வெளி நடப்பு செய்தனர். பா.ஜ., கவுன்சிலர் குணசேகரனும் வெளி நடப்பு செய்தார்.

எரியாத தெருவிளக்குகள்


தொடர்ந்து நடந்த கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர்கள் பேசியதாவது:

பத்மநாபன்: தெருவிளக்கு பராமரிப்பு சுத்த மோசம். மின் கம்பம் பொருத்தும்பணி தாமதமாகிறது. உயர் மின் கோபுர விளக்குகள் வெளிச்சம் குறைவாக உள்ளது. தெரு விளக்குகளும் கூடுதல் திறன் கொண்டதாக மாற்ற வேண்டும். குப்பை அகற்றும் பணியில் பெரும் மெத்தனம் நிலவுகிறது.

உமா மகேஸ்வரி: தெரு விளக்கு பராமரிப்பில், 15 வார்டுக்கு, 6 பேர் உள்ளனர். பழுதடைந்த சரி செய்யும் விளக்குகள் ஒரு நாள் தான் எரிகிறது. மண்டல கூட்டத்தில் தெரிவிக்கும் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அலுவலர், ஒப்பந்ததாரர்கள் முறையாக வருவதில்லை.

கோவிந்தசாமி: காங்கயம் ரோட்டில் ஒரு தெரு விளக்கு கூட எரிவதில்லை. மேயர் சென்று பார்க்க வேண்டும்.

மூன்றாண்டாக கேபிள் பழுது என்று காரணம் கூறி தெரு விளக்கு பொருத்தாமல் உள்ளது. 8 ஆயிரம் விளக்குகளில் எவ்வளவு பொருத்தப்பட்டது என்று தெரியவில்லை. 40 விளக்கு கேட்ட பகுதியில் 20 மட்டுமே வந்துள்ளது. மண்டல ஆய்வுக் கூட்டத்தில் 3 வது மண்டலம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

அலுவலர்கள் எதைச் சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. பணியாற்ற விரும்பாத அலுவலர்களை இடமாற்றம் செய்யுங்கள். இ சேவை மைய ஊழியர் வராமல் பூட்டப்பட்டுள்ளது.

மண்டல நிதியை அதிகரிக்க வேண்டும். வரி உயர்வு பிரச்னை குறித்து முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மேயர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டும்.

- மேலும் செய்தி உள்ளே

''குப்பை அகற்றுதல், குழாய் பதிப்பு பணிகளில் ஒப்பந்ததாரர்கள் முறைகேடு செய்கின்றனர். இதற்கு அலுவலர்களும் துணை போகின்றனர்'' என, விவாதத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றஞ்சாட்டினர்.

மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:

புதிய தெரு விளக்குகள் பொருத்தும் பணியில் 1404 தெரு விளக்குகளுக்கு மின் வாரியத்துக்கு தொகை செலுத்தப்பட்டு பணி துவங்கவுள்ளது. 156 விளக்குகளுக்கு தொகை செலுத்தவேண்டியுள்ளது. 649 விளக்குகளுக்கு மின்வாரியம் கேட்பு நோட்டீஸ் வழங்க வேண்டியுள்ளது. பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை; பள்ளி பராமரிப்பு பணிகள்; ஆரம்ப சுகாதார மையங்களில் கூடுதல் கட்டடம்; பூம்பாறை பகுதியில் புது பாலம் உள்ளிட்ட பணிகள் துவங்கப்படவுள்ளது.

தெரு விளக்கு பராமரிப்பு, குடிநீர்த்திட்ட குழாய் பதிப்பு பணிகள்; திடக்கழிவு மேலாண்மையில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. அலுவலர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பணிகளை முறையாக கண்காணிக்க வேண்டும்.

வரும் 3ம் தேதி 3வது மண்டலத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். அனைத்து அலுவலர்கள், ஒப்பந்த நிறுவனங்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். குப்பை அகற்றும் ஒப்பந்த நிறுவனம் முறையாகச் செயல்படாமல் 35 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 15 நாள் அவகாசத்தில் நிறுவனம் விதிமுறைகளின்படி உரிய வகையில் செயல்படாவிட்டால், ஒப்பந்தம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.சொத்து வரி பிரச்னையில் பல வகையில் அரசியல் செய்கின்றனர். இதுகுறித்து தெளிவாக கவுன்சிலர்கள் ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 2 மாதமாக கட்டடங்கள் மறு சீராய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசு வழிகாட்டுதல் பெற்று தீர்மானம் கொண்டு வரப்படும். பணி செய்ய விருப்பமா இல்லையா என்பதை நிறுவனம் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us