/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொன்னதை செய்வது அ.தி.மு.க., பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
/
சொன்னதை செய்வது அ.தி.மு.க., பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
சொன்னதை செய்வது அ.தி.மு.க., பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
சொன்னதை செய்வது அ.தி.மு.க., பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
ADDED : ஜூலை 30, 2025 10:20 PM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், சிறுபூலுவபட்டி பகுதி நிர்வாகிகள் கூட்டம் அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பகுதி செயலாளர் தங்கராஜ், தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
தோழமை கட்சியினரை அரவணைத்து கொள்ள வேண்டும். சொத்து மற்றும் தொழில் வரி உயர்வால் திருப்பூர் மக்கள் தி.மு.க.,வை விரட்டி அடிக்க முடிவு எடுத்து விட்டனர். வீடு இல்லா ஏழைகளுக்கு வீடு கட்டி தருவதாக அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி உறுதி கூறி உள்ளார்.
மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம், வேலைக்கு போகும் பெண்களுக்கு ஸ்கூட்டி உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளும் அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது.
சொன்னதை செய்வது அ.தி.மு.க.,; செய்யாதது தி.மு.க., ஆகஸ்ட் மாத இறுதியில் பழனிசாமி திருப்பூர் வருகிறார். அவரை வரவேற்க திருப்பூர் வடக்கு தொகுதி சார்பில் ஒரு லட்சம் பேர் வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எல்.ஏ.,க்கள் தாமோதரன், விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., சிவசாமி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர் கண்ணப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.