/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அ.தி.மு.க. ஆதரவு வாக்காளர் பட்டியலில் விடுபடக்கூடாது'
/
'அ.தி.மு.க. ஆதரவு வாக்காளர் பட்டியலில் விடுபடக்கூடாது'
'அ.தி.மு.க. ஆதரவு வாக்காளர் பட்டியலில் விடுபடக்கூடாது'
'அ.தி.மு.க. ஆதரவு வாக்காளர் பட்டியலில் விடுபடக்கூடாது'
ADDED : ஜன 03, 2026 05:59 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று கட்சி அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ், ஜெயலலிதா பேரவை தலைவர் லோகநாதன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ''வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட தகுதியான வாக்காளர்களை, மீண்டும் பட்டியலில் சேர்க்க உதவ வேண்டும். தகுதியற்ற மற்றும் இறந்த வாக்காளர் பெயரை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தும் வாக்காளர் பட்டியல் என்பதால், ஆதரவு வாக்காளர் பெயர் விடுபடக்கூடாது; வீடு வீடாக சென்று, அனைத்து வாக்காளர் பெயரும் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.
பகுதி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், முத்து, மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் மணிவண்ணன், இணை செயலாளர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

