ADDED : ஏப் 28, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கடந்த இரு மாதங்களாக திண்ணை பிரசாரம் நடைபெற்றுவருகிறது. திருப்பூர் மாநகராட்சி 52வது வார்டு, வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில் நேற்று திண்ணை பிரசாரம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமைவகித்தார்.
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் செய்த சாதனைகள் பட்டியலிடப்பட்டும், தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு குறித்து அச்சிடப்பட்ட நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் லோகநாதன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

