ADDED : ஜூலை 07, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், வாரம் தோறும், ஜெ., பேரவை ஏற்பாட்டில், மாவட்டம் வாரியாக, திண்ணை பிரசாரம் நடக்கிறது. திருப்பூர் தெற்கு தொகுதி, வாலிபாளையம் பகுதிக்குட்பட்ட ராயபுரம் பகுதியில், திண்ணை பிரசாரம் நடந்தது.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் கேசவன் முன்னிலையில், மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், பகுதி செயலாளர்கள் ஹரிஹரசுதன், முத்து, கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.