/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் தொழிலாளருக்கு போனஸ் கலெக்டரிடம் ஏ.ஐ.டி.யு.சி. மனு
/
பனியன் தொழிலாளருக்கு போனஸ் கலெக்டரிடம் ஏ.ஐ.டி.யு.சி. மனு
பனியன் தொழிலாளருக்கு போனஸ் கலெக்டரிடம் ஏ.ஐ.டி.யு.சி. மனு
பனியன் தொழிலாளருக்கு போனஸ் கலெக்டரிடம் ஏ.ஐ.டி.யு.சி. மனு
ADDED : செப் 24, 2025 11:52 PM

திருப்பூர்: அனைத்து பனியன் தொழிலாளருக்கும் தீபாவளி போனஸ் பெற்றுத்தரக்கோரி, ஏ.ஐ.டி.யு.சி. சார்பில், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், பனியன் பேக்டரி லேபர் யூனியன் (ஏ.ஐ.டி.யு.சி.,) பொதுச்செயலாளர் சேகர் தலைமையில், உறுப்பினர்கள் திரண்டுவந்து அளித்த மனு: திருப்பூர் மாவட்டத்தில், பின்னலாடை உற்பத்தி மற்றும் சாய, சலவை ஆலைகள் மற்றும் ஜாப்ஒர்க் நிறுவனங்களில் பல லட்சம் தொழிலாளர் பணிபுரிகின்றனர். திருப்பூரிலுள்ள பெரும்பாலான நிறுவனங்களில் தொழிலாளர் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. தொழிற்சாலை ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி, சட்டங்களை அமல்படுத்த, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தீபாவளி பண்டிகை நெருங்குகிறது. பெரும்பாலான நிறுவனங்களில், ஒப்பந்த முறை தொழிலாளரே அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு, சட்டப்படி போனஸ், கிராஜூவிட்டி பொருந்தும் என்பதை மறைத்து, போனஸ் உள்ளிட்ட பண பலன்களை வழங்காமல் ஏமாற்றுகின்றனர். பனியன் தொழில் சார்ந்த உற்பத்தியாளர் சங்கங்கள், அனைத்து தொழிலாளருக்கும் கிடைக்கவேண்டிய பண பலன்களை முழுமையாக கிடைக்கச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.