/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆலப்புழா, திருவனந்தபுரம் ரயில்கள் எல்.எச்.பி., பெட்டிகளாக மாற்றம்
/
ஆலப்புழா, திருவனந்தபுரம் ரயில்கள் எல்.எச்.பி., பெட்டிகளாக மாற்றம்
ஆலப்புழா, திருவனந்தபுரம் ரயில்கள் எல்.எச்.பி., பெட்டிகளாக மாற்றம்
ஆலப்புழா, திருவனந்தபுரம் ரயில்கள் எல்.எச்.பி., பெட்டிகளாக மாற்றம்
ADDED : பிப் 20, 2026 06:40 AM
திருப்பூர்: பயணியர் வசதிக்காக, ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மார்ச் முதல் எல்.எச்.பி., பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.
கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து தினமும் மதியம், 3:20 மணிக்கு புறப்படும் சூப்பர்பாஸ்ட் ரயில் மறுநாள் காலை, 5:15 மணிக்கு சென்னை சென்றடைகிறது. தினமும் மாலை, 5:15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் சூப்பர் பாஸ்ட் ரயில் மறுநாள் காலை, 10:00 மணிக்கு சென்னை செல்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு ஸ்டேஷன்களில் இவ்விரு ரயில்களும் நின்று செல்கின்றன.
இந்த ரயில்கள், இவற்றின் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரம் வரும் ரயில்கள் என, நான்கு ரயில்கள், மார்ச் முதல் வாரம் முதல் எல்.எச்.பி., பெட்டிகளுடன் பயணிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி தொழில்நுட்பத்துடன், இந்தியாவில் தயாராவது எல்.எச்.பி., பெட்டி. நவீன, இலகு ரக மற்றும் பாதுகாப்பான பெட்டிகளான இவை, அகலமான ஜன்னல், அதிக இடவசதி, விபத்துக்கால பாதுகாப்பு, தீப்பிடிக்காத தன்மை, குறைவான சத்தம் மற்றும் சிறந்த இடைநீக்க அமைப்பு கொண்டவை. விபத்தின் போது ஒரு பெட்டியின் மீது மற்றொரு பெட்டி ஏறுவதை தடுக்கும் தொழில்நுட்பம் கொண்டது.

