sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 எரிந்த நிலையில் பெண் சடலம் கொலையா என விசாரணை

/

 எரிந்த நிலையில் பெண் சடலம் கொலையா என விசாரணை

 எரிந்த நிலையில் பெண் சடலம் கொலையா என விசாரணை

 எரிந்த நிலையில் பெண் சடலம் கொலையா என விசாரணை


ADDED : பிப் 21, 2026 05:01 AM

Google News

ADDED : பிப் 21, 2026 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தாராபுரத்தில், எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கோட்டைமேடு தெரு, கல்லறை தோட்டம் முன்பு, பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியின் பின்பகுதியில் உள்ள குறுகிய இடத்தில் பெண் சடலம் கிடந்தது தெரிந்தது.

தாராபுரம் டி.எஸ்.பி., சிவகுமார், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அங்கு விசாரணை நடத்தினர். தலைப்பகுதி மற்றும் கால் பாதம் தவிர, உடல் முற்றிலும் எரிந்தநிலையில் காணப்பட்டது. இறந்தவர் அனுமந்தபுரத்தைச் சேர்ந்த காளியம்மாள், 80, என, தெரிந்தது. கணவர் கரிகாலன் இறந்த பின் தனியாக வசித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன், விபத்தில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. வீட்டில் ஓய்வில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவரை, அவரது மூன்று மகன்களும் பார்த்து சென்றுள்ளனர்.

அதன்பின், இந்த சம்பவம் நடந்துள்ளது. சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us