/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயன்பாடற்ற மோட்டார் அறை அகற்றுவதில் லட்சியம்
/
பயன்பாடற்ற மோட்டார் அறை அகற்றுவதில் லட்சியம்
ADDED : நவ 02, 2025 03:24 AM

திருப்பூர்: வெள்ளியங்காடு பகுதியில் பயன்பாடின்றி உள்ள சேதமடைந்த மோட்டார் அறை அகற்றப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.
திருப்பூர் மாநகராட்சி, 52 வது வார்டுக்கு உட்பட்ட முத்தையன் கோவில் பகுதியில், தென்னம்பாளையம் சென்று சேரும் ரோட்டில், மோட்டார் அறை உள்ளது. நீண்ட காலமாக இந்த அறை பயன்பாட்டில் இருந்தது. இதன் கட்டுமானம் மிகவும் சேதமடைந்த நிலையில், வார்டு கவுன்சிலர் கணேசன் கோரிக்கை வைத்து புதிய மோட்டார் அறை கட்டப்பட்டது. தற்போது அந்த புதிய அறை பயன்பாட்டில் உள்ளது.
இந்த சேதமான, பயன்பாடற்ற அறையை இடித்து அகற்ற வேண்டும் என ஓராண்டுக்கும் மேலாக கவுன்சிலர் வலியுறுத்தியும் இது வரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது இதை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் உருவாகி வருகிறது. எந்நேரமும் இதன் அருகில் மக்கள் நடமாட்டம் உள்ளது. சேதமடைந்து காணப்படும் இந்த கட்டடத்தால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்னர் இதை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

