ADDED : நவ 02, 2025 03:24 AM

அவிநாசி: அவிநாசி அடுத்த வஞ்சி பாளையத்தில், சாமந்தன் கோட்டை, தெக்கலுார் செல்லும் பிரிவில் இரண்டாம் திட்ட கூட்டு குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக ரோட்டில் குடிநீர் வீணாக செல்கிறது.
அப்பகுதியில் தேங்கி நிற்கும் குடிநீர் நாளடைவில் சாக்கடை நீருடன் கலந்து குளம்போல் தேங்குவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு, நோய் தொற்றுகள் உருவாகக்கூடும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
கழிவுநீர் கால்வாய் சிறுபாலத்தை மண் கொட்டி மறுபுறம் கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாமல் அடைத்து வைத்துள்ளனர். இது குறித்து, குடிநீர் வாரியத்திற்கும், புதுப்பாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதும் இதுவரை உடைந்த குடிநீர் குழாயை சரி செய்யவில்லை. உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, தினமும் பல லட்சம் லிட்டர் நீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

