/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளங்களை பாதுகாக்க பாசன சபை அமைக்கணும்!
/
குளங்களை பாதுகாக்க பாசன சபை அமைக்கணும்!
ADDED : மே 20, 2025 11:44 PM
-- நமது நிருபர் -
திருப்பூர் மாவட்டத்தில், குளங்கள் முழுக்க அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அரசால் அனைத்து குளங்களையும் பராமரிக்க முடிவதில்லை. நாளடைவில் குளங்களுக்கும் விவசாயிகளுக்கும் சம்பந்தமில்லாத நிலை ஏற்பட்டு விட்டது.
இதனால், பல குளங்கள் போதிய பராமரிப்பின்றி, முட்புதர் மூடி கிடக்கிறது. காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு இன்று குப்பை மேடாக மாறி வருகிறது.
வண்டல் மண்ணே இல்லாத குளங்களில் கூட வண்டல் மண் எடுப்பதாக கூறி, கிராவல் மண் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, வருவாய் துறையை கொண்டு அரசு மேற்பார்வை செய்யலாம். முழுக்க முழுக்க உள்ளூர் விவசாயிகள் அடங்கிய பாசன சபைகளை ஏற்படுத்த வேண்டும்.
அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அங்கு முறைகேடாக மண் அள்ளுவதற்கும், குப்பையை கொட்டுவதற்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.