/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண உற்சவம்
/
ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜன 02, 2025 10:16 PM

உடுமலை; குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ஜன., 11ம் தேதி நடக்கிறது.
உடுமலை அருகே குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் மார்கழி மாத உற்சவம் தொடர்ந்து நடக்கிறது. அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது.
பக்தர்களின் சிறப்பு பஜனைகளும் நடக்கிறது. வரும் 10ம் தேதி காலையில் பூமிலட்சுமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் நடக்கிறது.
மாலையில் ராஜ விநாயகர் கோவில் மற்றும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் கோவிலிலிருந்து, ஆண்டாள் நாச்சியார் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துவரப்படுகிறது.
இரவு, 8:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் ரங்கமன்னார், ஆண்டாள் நாச்சியார் சுவாமிக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 11ல் காலையில் கோ பூஜையுடன் திருக்கல்யாண உற்சவ பூஜைகள் துவங்குகிறது.
தொடர்ந்து பாராயணம் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் 11:00 மணிக்குள் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.