ADDED : ஜூலை 27, 2026 04:39 AM

திருப்பூர்: பெருமாநல்லுார் கே.எம்.சி., பப்ளிக் பள்ளியின், 18வது ஆண்டு விழா - 'க்ளியோஸ் பெஸ்டா - 2026' கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தாளாளர் மனோகரன் தலைமை வகித்தார். தலைவர் சண்முகம் - லோகநாயகி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் வருண் முத்துலிங்கம் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். பள்ளி ஆண்டு விழா மலரை, சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர். 10 மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு, பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
தேசிய திறந்த நிலை பள்ளி முன்னாள் செயலர் தருமன், சொற்பொழிவாளர் பர்வீன் சுல்தானா பேசினர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ஏற்பாடுகளை, தலைமை செயல் அலுவலர் சுவஸ்திகா, தலைமை ஆசிரியர் பிரேமலதா ஆகியோர் செய்திருந்தனர்.
