ADDED : நவ 14, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வஞ்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், போதை பொருள் விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தெய்வ மணி, போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கினார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாகவும், அவற்றை தடுக்க அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும் விளக்கினார். காவலர் செல்வராணி, சைபர் கிரைம் குறித்து, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமையாசிரியை கவிதா செய்திருந்தார்.