தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மீன் வளர்ப்பு குட்டை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கல் விண்ணப்பிக்க அழைப்பு

மீன் வளர்ப்பு குட்டை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கல் விண்ணப்பிக்க அழைப்பு

மீன் வளர்ப்பு குட்டை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கல் விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : நவ 06, 2026 07:56 PM

ADDED : நவ 06, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:56 PM ADDED : நவ 06, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், பண்ணைக்குட்டை அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு, 50 சதவீத அரசு மானியம் வழங்கப்படுகிறது.

இது குறித்து, திருப்பூர் கலெக்டர் முத்துக்குமரன் அறிக்கை:

உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரித்து, மீன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.20 ஆயிரம் வீதம், 50 சதவீத உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது. மீன் குஞ்சுகள், தீவனம், உரங்கள், பண்ணைக் கருவிகள் உள்ளிட்ட செலவுகளுக்கு இம்மானியம் வழங்கப்படும்.

நீர் ஆதாரம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நில ஆவணங்கள், முகவரிச் சான்று உள்ளிட்டவற்றுடன் வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0424 2221912, 8903746476 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஈரோடு மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தையும் அணுகலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us