ADDED : நவ 06, 2026 08:00 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்: தீபாவளி சிறப்பு சேவையாக அரசு பஸ்களுக்கு மாற்றாக இயக்கப்பட்ட தனியார் ஒப்பந்த பஸ்களில், இன்று (நவ.,6) எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் கூட்டம் இல்லை. கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் நீண்ட நேரம் காத்திருந்த பஸ்கள், குறைந்த பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றன.
தென்மாவட்டங்களுக்கு அதிக பயணிகள் செல்வர் எனக் கணிக்கப்பட்டதால், மதுரைக்கு, 21 தனியார் ஒப்பந்த பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இன்று 10 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இன்று பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
